InformationNeeds.com
Home/கட்டுரைகள்/நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு | Murugan worship fulfills the wish
Spirituality

நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு | Murugan worship fulfills the wish

June 4, 2024uma211 views

நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு : 

 

நமது பிரார்த்தனைகள் உடனடியாகப நிறைவேற வேண்டுமானால், அதற்குரிய சிறந்த பரிகாரங்கள் நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளன. 

 

உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறவில்லையா? இறைவனை நினைத்து நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்யுங்கள்... நிச்சயம் நல்ல பலன்களைப் பெறலாம். 

 

முருகப்பெருமானை நினைத்து பக்தியுடன் வழிபட்டால், அவர் நம் விருப்பங்களை நிறைவேற்றுவார். 

 

நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள், நோய்கள் விலக, பிரிந்த தம்பதிகள் இணையவும், காதலில் இணையவும், திருமணத் தடை நீங்குவும் இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால் நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும். 

 

முதலில் நீங்கள் ஒரு சிறிய அளவு வேல் வாங்க வேண்டும். 

 

நேரடியாக வாங்குவதை விட, நம் குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் வாங்க வேண்டும். 

 

இதனால் அவர்களின் ஆசியுடன் இந்த வேலை பெற்று விடுகிறோம். 

 

அந்த வேல் மீது மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஒரு செம்பினாலான சொம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். 

 

இந்த சொம்பைச் சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் போட்டு விபூதி நிரப்பவும். 

 

இப்போது இந்த வேலை விபூதிக்குள் நுழைக்க வேண்டும். அதன் பிறகு வேலைச் சுற்றி மலர்களால் அலங்கரிக்க வேண்டும். 

 

அதன் பிறகு உதிரி பூக்களை எடுத்து "ஓம் முருகா" என்று கூறி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். 

 

இதை 108 முறை செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்கு உகந்த செவ்வாய் கிழமையில் இவ்வாறு செய்வதால் முருகனின் அருள் பரிபூரணமாக கிட்டும். 

 

 

 

 

 9 செவ்வாய்க்கிழமை விரதம் : 

 

செவ்வாய் கிழமைதோறும் காலையில் குளித்துவிட்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீடு திரும்பியதும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கந்தஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமான் தொடர்பான ஸ்தோத்திரங்களை ஒருவர் பாராயணம் செய்யலாம். 

 

மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்குச் சென்று விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 

 

இப்படி 9 செவ்வாய் கிழமை விரதம் இருந்தால்,செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மை தரும். 

 

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கட்டும் யோகம் உண்டாகும். 

 

நிலம் தொடர்பான சொத்துக்களில் லாபம் உண்டாகும். 

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்படும். 

 

பய உணர்வுகள் நீங்கி தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். 

 

திருமணத் தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். 

 

வியாபாரம் பெரிய அளவில் வளரும். 

 

 

 

நாமும் கந்த பெருமானை இவ்வாறு வழிபட்டு வளமும் நலமும் பெறுவோம் 

 

நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு | Murugan worship fulfills the wish | InformationNeeds